தூய மரியன்னையின் திரு இருதயம் (Immaculate Heart of Mary)

தூய மரியன்னையின் திரு இருதயம் திருப்பிலி முன்னுரை மரியாவின் மாசற்ற இதயத்தின்மீது அளவுகடந்த இறைப்பற்றும், அன்பும் கொண்ட இறைகுலமே, கருவிலே கறையொன்றில்லா கன்னி மரியாவின் பெருமையின் அடிப்படையில் தோன்றியதுதான் மரியாவின் மாசற்ற இதய பக்தி. பாத்திமாவில் மரியா தந்த காட்சியில், 'என் மாசற்ற இதயம் வெற்றி பெறும்" என்று முன்னறிவித்தார். எனவே, இது போராட்டத்தின் நேரமல்ல, மன்றாட்டின் நேரம். மரியன்னையின் மாசற்ற இதய பக்தியை என் இதய பக்திக்கு இணையாக வைக்க நான் விரும்புகிறேன்" என்று பாத்திமா செய்தியில் குழந்தை இயேசு வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். லூசியாவிடம் மரியா பேசியதாவது, ''என் மகள் லூசியாவே, முட்களால் சூழப்பட்ட என் இதயத்தைப் பார். மீட்புக்குத் தேவையான அனைத்து அருளையும் பெற ஐந்து முதல் சனிக்கிழமைகளில் மறையுண்மைகளை தியானித்து முழு செபமாலையை என்னுடன் சேர்ந்து ஒப்புக்கொடுப்பாயா" என்று கேட்டிருக்கிறார். அந்த முட்களை ஒவ்வொன்றாக அகற்றி அக்காயத்தை நம் அன்பினால் ஆற்ற வேண்டும். நம் ஒவ்வொரு நினைவும், சொல்லும், செயலும் அதற்கு ஏற்றதாய் அமையவேண்டும். பாத்திமாவில...