ஆகஸ்டு 06 ஆண்டவரின் தோற்றமாற்றம் திருப்பலி முன்னுரை நண்பனாய் நாளும் தோள் கொடுத்து, கரம் பிடித்து, அரவணைத்து அன்பு செய்யும் நண்பனாகிய நம் இயேசுவிடம் நலன்களை நாடி வந்துள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்தி, ஆண்டவரின் உருமாற்ற விழா திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு நேசத்தோடு வரவேற்கின்றோம். இன்றைக்கு நமக்குத் தரப்பட்டுள்ள வாசகங்கள் உருமாற்றத்தையே மையமாகக் கொண்டுள்ளன. துன்பங்களைக் கடந்து, சாவினை வென்றதாலே இறைவனின் மகனாய் அவரது வலப்புறம் அமர்ந்து ஆட்சி செய்கின்றார் இயேசு. நாமும் துன்பங்களில் துவண்டு போகாமல், இறைத் திருவுளம் ஏற்று நடக்கும் போது இறைவனின் பிள்ளைகளாகும் பேரின்பம் பெறுகிறோம். இயேசுவின் உருமாற்றம் அவருடைய சீடர்களுக்கு புது ஆற்றலையும், உத்வேகத்தையும் அளித்தது. இன்றும் பலிபீடத்தில் காணிக்கையாக்கப்படும் கோதுமை அப்பத்திலும், திராட்சை இரசத்திலும் ஏற்படும் உருமாற்றமே இயேசுவின் திரு உடலாகவும், திரு இரத்தமாகவும் மாறி நமக்கு நிலை வாழ்வை அளிக்கின்றது. "இவர் என் அன்பார்ந்த மகன் என்று இயேசுவைச் சான்று பகர்ந்த இறைவன், நம்மையும் இவன் என் ம...